தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை என்று அவரது ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். அவர்களை திருப்திபடுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜயசேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நடித்து வருகின்றார் இதில் அவருக்கு சமந்தாவுடன் நடிகை நயன்தாராவும் நடிக்க உள்ளார். இதனால் இந்தப் படத்தினுடைய எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த நடிகை சமந்தா ரசிகர்களில் ஒருவர் அவரின் மேல் கடும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சமந்தா முன்பெல்லாம் கடுமையான விமர்சனங்களால் பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். ஆனால் தற்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.