மலையாள நடிகையான இனியா தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பாடசாலை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.தொடர்ந்து தமிழில் ஆதிக்கம் செலுத்திய இனியாவின் நடிப்பில் வாகை சூடவா, மௌனகுரு ஆகிய படங்களும் ஹிட் அடித்தது. வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்ததால் தமிழகத்தில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
வாகைசூடவா படத்தில் இடம்பெற்ற ‘சர..சர சாரக்காத்து வீசும்போது..சாரைப் பார்த்து பேசும்போது’ என்னும் பாடல் இப்போதும் பலருக்கு ஆல்டைம் பேவரட்டாக உள்ளது. இதேபோல் மெளனகுருவில் இனியாவின் நடிப்பு வெகுவாகப் பேசபட்டது. இப்படியெல்லாம் இருந்தும்
இனியாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு படமும் பெரிய அளவிற்கு வெற்றியை எட்ட முடியவில்லை. இதனால் முன்னணி நடிகையாக அவரால் வளர முடியவில்லை என்ற சோகம் அவருக்குள் இருந்து வருகிறது. பாரதிராஜா இயக்கத்தில் ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் கடைசிநேரத்தில் அந்த வாய்ப்பும் நழுவிப்போனது.
எப்படியாவது முன்னணி நடிகையாக மாறி விட வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் பயன்படுத்தும் அதே ராஜ தந்திரங்களை பயன்படுத்த துவங்கியிருக்கிறார் இனியா. அப்படி என்ன ராஜ் தந்திரம் என கேட்கிறீர்களா.வேறென்ன கவர்ச்சி போட்டோ சூட் தான். தமிழ் சினிமாவை பொருத்தவரை பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கே போட்டியாக வெளியிட்டுள்ள இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படமானது அனைவரையும் அசர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
அதிலும் குறிப்பாக தொடையழகி என பெயர்பெற்ற நடிகை ரம்பாவைப் போல தன் தொடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்தால் இணைய தளமே ஒரு ஆட்டம் கண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். இருந்தாலும் தமிழில் இழுத்துப் போர்த்தியே நடித்துவந்த இனியாவா இது? சினிமா வாய்ப்புக்காக இப்படி மாறிட்டாரே என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர் ரசிகர்கள். 
