அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். குறிப்பாக அதிபர் ஆன பிறகு நமது பைடனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இந்நிலையில் அவரின் கருத்துக்கள் மற்றும் நாட்டு நலப் பணிகள் குறித்த விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக வலைதளம் என்பது அவசியமாகும். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
டிரம்ப் காலத்தில் அதிபரின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் ரீசெட் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @POTUS45 என்று மாற்றப்பட்டுள்ளது. அவர் பதிவிட்ட ட்வீட்கள் எல்லாம் அப்படியே இருக்கும் என்றாலும் அந்த கணக்கிலிருந்து புதிய ட்வீட்களை யாராலும் பதிவிட முடியாது என வெள்ளை மாளிகை சமூக வலைதள பிரிவு கூறியுள்ளது. மேலும் முன்னாள் அதிபராக இருந்த ட்ரம்பின் அதிகாரபூர்வ கணக்கு அவரின் சில நடவடிக்கைகளால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது