அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நினைவஞ்சலி பதிவு செய்து உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.