தமிழர்கள் மரபுவழி கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாடுகள் அனைத்தும் நம் வாழ்வியல் மருத்துவம் சார்ந்ததாகதான் இருக்கின்றது.குறிப்பாக சித்த மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் உலகிலேயே பக்கவிளைவில்லாத ஒரே மருத்துவம் அதுதான்
அந்த மருத்துவத்தில் துளசி முக்கியமான ஒரு மூலிகை ஆகும். நம் வீட்டில் சாதாரணமாக கூட இதை வளர்க்கலாம். வீட்டில் துளசிச் செடியை வைத்து விட்டால் அதனை எடுத்து அடிக்கடி பச்சையாக கூட மெல்லலாம். தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தும்மல், மூக்கடைப்பு போன்ற சில பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக இது அமையும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே கலர் கலராக மாத்திரைகளை போடாமல் துளசிஇலையை வாயில்போட்டு மென்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த துளசியானது காய்ச்சலை குறைத்து. தொண்டைப் புண்னையும் போக்கும். மேலும் துளசியை அரைத்து அதில் சந்தனப் பொடியை சேர்த்து குலப்பி நெற்றியில் பற்றுபோட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு உடலில் ஏற்படும் சூடும் குறையும். கருப்பு துளசியின் சாறானது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும்.
அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும் அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால் அது நல்ல பலன்களைத் தரும். தெய்வீக இலையான துளசியை பயன்படுத்தி நம் நோய்களை விரட்டுவோம்