சின்னத்திரையில் இருந்து தற்போது திரைஉலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை வாணி போஜன். இவர் “தெய்வமகள்” என்கிற தொடரில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். அதுபோக இவரை இவருடைய ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.
பிப்ரவரி மாதம் இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” என்கிற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோக இவருடைய நடிப்பு அனைத்து தரப்பு மக்களாலும் கவரப்பட்டது. தற்போது இவருக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு குவிந்து வருகின்றது.”ஓ மை கடவுளே” படத்திற்கு பிறகு தற்போது வாணிபூஜன் ட்ரிபிள்ஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் நடிகை வாணி போஜன் தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் உடன் இணைந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ,அதன் பின்னர் பிசியான நடிகராக வலம் வருபவர் தான் சசிகுமார். தற்போது இவர் நடிப்பில் எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு இருக்க அடுத்ததாக சசிகுமார் இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் புதியதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .மேலும் இந்த படத்தை 4 monkey’s நிறுவனம் சார்பில் சத்தியம் கிஷோர் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு “பகைவனுக்கு அருள்வாய்” என்ற கவிஞர் பாரதியாரின் பாடல் வரிகள் தலைப்பாக சூட்டப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்தப்படத்திலும் வாணி போஜன் இருக்கிறாராம்.