மத்திய அரசு தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில்.அஞ்சலக தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும், இல்லையென்றால் தேர்வை நிறுத்த வேண்டும் என ஜோதிமணி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க மறுப்பது தமிழக இளைஞர்களுக்கு பிஜேபி இழைக்கும் மாபெரும் துரோகம். தொடர்ந்து தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அநீதியாக பறிக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. இப்படியே போனால் தமிழகத்தில் தமிழர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது. இது கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழக மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதும் உரிமையைப் பெற வேண்டும். அதுவரை அஞ்சலக தேர்வுகளை நிறுத்திவைக்கவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.